தமன்னாவுடன் நடிச்சா சீக்கிரம் கல்யாணமாகிடுமாம்!

|

Tamannah S Unique Rashi   
தமன்னாவுடன் ஜோடி சேரும் ஹீரோக்களுக்கு விரைவில் கல்யாணம் ஆகிவிடுமாம்.

நடிகை தமன்னாவுக்கு தமிழில் வாய்ப்புகள் அவ்வளவாக இல்லை. இதனால் ஆந்திரக் கரையோரம் சென்ற அவருக்கு வாய்ப்புகள் வந்து குவிகின்றன. அவரும் சந்தோஷமாக நடித்துக் கொண்டிருக்கிறார். அங்குள்ள இளம் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து ஒரு ரவுண்ட் வந்து கொண்டிருக்கிறார். அதிலும் அவர் சிரஞ்சீவி குடும்பத்தாருக்கு மிகவும் நெருக்கமாம். அவர்களிடம் அனுமதி பெற்ற பிறகே பிற இளம் ஹீரோக்களுடன் நடிக்கிறார் என்று டோலிவுட்டில் பரவலாகப் பேசப்படுகிறது.

இந்நிலையில் தமன்னாவை பற்றி இன்னுமொரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. தமன்னாவுக்கு கல்யாண ராசியாம். அதாவது அவருடன் ஜோடி சேரும் திருமணமாகாத ஹீரோக்களுக்கு விரைவில் திருமணமாகிவிடுகிறதாம். இதை அவரே பெருமையாக செல்லி வருகிறாராம். என் கூட நடிக்கும் ஹீரோக்களுக்கு திருமணமாகிவிடும் என்று கூறுகிறாராம்.

கார்த்தி, ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜுன் ஆகியோர் தன்னுடன் நடித்தவுடன் அவர்களுக்கு திருமணமாகிவிட்டது என்று கூறியுள்ளார். அவர் அண்மையில் நடித்து வெளிவந்த ரச்சா பட நாயகன் ராம் சரண் தேஜாவுக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Close
 
 

Post a Comment