ஆந்திர முதல்வர் மிரட்டலால் பயந்தேன்: பி.வாசு தகவல்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பிறமொழி ஹீரோக்கள் தமிழில் கதை கேட்பதால் தமிழ் இயக்குனர்கள் பிறமொழியில் ஜெயிக்க முடிகிறது என்றார் பி.வாசு. நடிகர் மோகன்பாபு மகள் லட்சுமி மன்சு. தமிழ், தெலுங்கு இருமொழியில் 'வருவான் தலைவன் என்ற படத்தை தயாரிக்கிறார். முதன்முறையாக இப்படம் மூலம் என்.டி.பாலகிருஷ்ணா தமிழில் அறிமுகமாகிறார். மனோஜ் மன்சு, தீக்ஷா சேத் ஜோடி. சேகர் ராஜா இயக்குகிறார். இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. இதில் இயக்குனர் பி.வாசு பேசியதாவது: தெலுங்கில் என்.டி.பாலகிருஷ்ணாவை இயக்க எண்ணி அப்போது ஆந்திர முதல்வராக இருந்த என்.டி.ராமராவிடம் கதை சொல்லச் சென்றேன். ஆங்கிலம், தெலுங்கில் கதை சொல்ல வராது தமிழில் சொல்கிறேன் என்றேன். 'ஆந்திரா முதல்வரிடம் தமிழில் கதை சொல்கிறேன் என்கிறாயே என்ன தைரியம் உனக்கு என்றார். பயந்துவிட்டேன்.

பிறகு சிரித்தபடி, 'நான் 40 வருடம் தமிழ்நாட்டு தண்ணி குடித்து வளர்ந்தவன். எனக்கு தமிழ் தெரியும். தமிழிலேயே சொல். அடுத்த முறை சொல்லும்போது தெலுங்கில் சொல்ல வேண்டும் என்றார். ராமராவ், நாகேஸ்வரராவ், ராஜ்குமார், மம்மூட்டி என 4 மொழி நடிகர்களுமே தமிழ்நாட்டில் வாழ்ந்தவர்கள். அவர்களது பிள்ளைகளும் தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். அதனால்தான் அவர்களை எளிதாக அணுக முடிகிறது. தமிழிலேயே கதை சொல்லி அவர்களிடம் கால்ஷீட் பெற்று தமிழ் இயக்குனர்கள் பிற மொழிகளில் வெற்றி பெற முடிகிறது. இவ்வாறு பி.வாசு கூறினார். என்.டி.பாலகிருஷ்ணா, சிம்பு, மனோஜ் மன்சு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


 

Post a Comment