பழம்பெரும் நடிகர்-இயக்குநர் எஸ்.ஏ.கண்ணன் மரணம்

|

29 Film Director S Kannan Passes Away Aid0136
சென்னை: பழம்பெரும் நடிகர்-இயக்குநர் எஸ்.ஏ.கண்ணன், மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82.

சக்தி நாடக சபா மற்றும் சிவாஜி நாடக மன்றத்தில் பணிபுரிந்தவர், எஸ்.ஏ.கண்ணன். பராசக்தி, பாசமலர், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்திருந்தார். சிவாஜிகணேசன் நடித்த 'தங்கப்பதக்கம்,' 'வியட்நாம் வீடு' ஆகிய நாடகங்களை இயக்கியுள்ளார். சத்யம், தனிக்குடித்தனம், கீதா ஒரு செண்பகப்பூ ஆகிய படங்களை டைரக்டும் செய்தார்.

இவருடைய மனைவி காமாட்சி ஏற்கனவே மரணம் அடைந்து விட்டார். எஸ்.ஏ.கண்ணன் தனது மகன்களுடன் வசித்து வந்தார். நேற்று அதிகாலை அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, தூக்கத்திலேயே மரணம் அடைந்தார்.

மரணம் அடைந்த எஸ்.ஏ.கண்ணனின் சொந்த ஊர், தஞ்சை மாவட்டம் சாலியமங்களம். அவருக்கு ஒரு மகளும், 3 மகன்களும் இருக்கிறார்கள்.

அவருடைய உடல் தகனம் சென்னை ஜாபர்கான்பேட்டையில் உள்ள மயானத்தில் நேற்று மாலை 4 மணிக்கு நடந்தது.
Close
 
 

Post a Comment