அழகு ராஜா கார்த்தி.. அழகு ராணி காஜல்!

|

Kajal Is Karthi S Azhagu Rani   
கார்த்தி நடிக்கும் அழகு ராஜா படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறாராம்.

காஜல் அகர்வால் தெலுங்கில் உச்சத்தில் இருக்கிறார். டோலிவுட் ஹீரோக்களின் மனம் கவரும் நாயகி யார் என்றால் அது காஜல் தான். அவர் தமிழிலும் ஒரு ரவுண்ட் வரலாமே என்று முடிவு செய்துள்ளார். அவர் முடிவு செய்த நேரம் ரொம்ப நல்ல நேரம் போலும். அது தான் கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களான விஜயுடன் துப்பாக்கி, சூர்யாவுடன் மாற்றான் என்று நடித்து வருகிறார்.

பார்த்தியா முதல்ல சூர்யா, இப்ப விஜயுடன் நடிக்கிறேன் என்று தனது தோழிகளிடம் சொல்லி, சொல்லி பெருமைப்படுகிறாராம். காஜலும், கார்த்தியும் சேர்ந்து நான் மகான் அல்ல படத்தில் நடித்தார்கள். அவர்கள் ஜோடிப் பொருத்தம் ரொம்ப நல்லா இருக்கு என்று கூறப்பட்டது. புரூ காபி விளம்பரத்தில் கூட அந்த கியூட் ஜோடி தான் வருகிறார்கள்.

இந்நிலையில் இயக்குனர் ராஜேஷ் கார்த்தியை வைத்து இயக்கும் அழகு ராஜா படத்தில் காஜல் அகர்வால் தான் ஹீரோயினாம். இதன் மூலம் அவர் இரண்டாவது முறையாக கார்த்தியுடன் ஜோடி சேர்கிறார்.

இந்த படத்தில் காமெடி சந்தானமும் உள்ளார். சந்தானம், கார்த்தி கூட்டணி சிறுத்தை படம் மூலம் வெற்றிக் கூட்டணி ஆகியுள்ளது. இந்த படத்தில் எப்படி என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Post a Comment