மறைந்த தயாரிப்பாளர் பி.நாகிரெட்டி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி, பி.நாகிரெட்டி நினைவு திரைப்பட விருது வழங்கும் விழா, சென்னையில் நடைபெற்றது. முதலில், பாடகர் உன்னி மேனனின் இசை நிகழ்ச்சி நடந்தது. பிறகு பி.வெங்கட்ராம ரெட்டி வரவேற்றார். ஏ.வி.எம்.சரவணன், எஸ்.பி.முத்துராமன், வைரமுத்து, பிரபு, நதியா சிறப்புரையாற்றினர். கடந்த ஆண்டின் சிறந்த பொழுதுபோக்கு படமாக, நடுவர்கள் சவுகார் ஜானகி மற்றும் கே.பாக்யராஜ் மூலம் தேர்வு செய்யப்பட்ட 'கோ' படத்துக்கு விருது வழங்கப்பட்டது. அதன் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் விருது மற்றும் ஒன்றரை லட்ச ரூபாய்க்கான காசோலையை பெற்றார். விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரன், 'கோ' இயக்குனர் கே.வி.ஆனந்த், எழுத்தாளர்கள் சுபா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Post a Comment