ஜெயம் ரவிக்காக ரவி தேஜா படத்திலிருந்து அமலா பால் விலகல்!

|

Amala Paul Opts From Ravi Teja Film   
ஒரு படத்தில் ஒப்பந்தமாகி விலகுவதில் குறுகிய காலத்தில் பெயர் பெற்ற நடிகையாகிவிட்டார் அமலா பால்.

தமிழ், தெலுங்கில் பிஸியாக உள்ள அவர், லேட்டஸ்டாக விலகியுள்ள படம் ரவி தேஜாவின் 'சார் ஒஸ்தாரா'!

காரணம், அதை விட பெரிய படமான, அதுவும் தமிழ் - தெலுங்கில் தயாராகும் ஜெயம் ரவியின் பூலோகம். ராம் சரண் படத்துக்கு வேறு தொடர்ச்சியாக கால்ஷீட் தர வேண்டியிருந்ததால், ரவி தேஜா படத்தை வேண்டாம் என்று கூறிவிட்டாராம் அமலா.

இதுகுறித்து அவர் கூறுகையில், "ராம் சரண் பட ஷூட்டிங் லண்டனில் நடக்கிறது. அதற்கு 20 நாட்கள். அதற்கடுத்து ஜெயம் ரவி படம். இதற்கு தொடர்ச்சியாக தேதிகள் கொடுத்தாக வேண்டும். அதான் ரவிதேஜா படத்தை கைவிட வேண்டியதாகிவிட்டது. வேறு பிரச்சினை இல்லை," என்றார்.

அமலா பால் ஏற்கெனவே தனுஷின் 3 உள்பட மூன்று படங்களில் முதலில் நடிக்க ஒப்புக் கொண்டு பின் விலகிக் கொண்டது நினைவிருக்கலாம்.
 

Post a Comment