கப்பார் சிங்கை பார்த்து பவன் கல்யாணை புகழ்ந்த ரஜினிகாந்த்

|

Rajinikanth Praises Pawan Kalyan On Gabbar Singh
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பவன் கல்யாணின் படமான கப்பார் சிங்கை பார்த்து அவரது நடிப்பை வெகுவாகப் புகழ்ந்துள்ளார்.

சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண், ஸ்ருதி ஹாசன் நடித்த படம் கப்பார் சிங். சல்மான் கான், சோனாக்ஷி சின்ஹா நடித்த தபாங் படத்தின் தெலுங்கு ரீமேக். இந்த படம் திரைக்கு வந்த 10 நாட்களில் ரூ.52 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இந்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தாருக்காக நேற்று சென்னையில் ஸ்பெஷலாக திரையிடப்பட்டது.

படத்தைப் பார்த்த ரஜினி குடும்பத்தார் அதில் சில காட்சிகளை திரும்ப, திரும்ப காண்பிக்குமாறு கூறி பார்த்தார்களாம்.

படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்த ரஜினிகாந்த் கூறுகையில், கப்பார் சிங் பக்கா மாஸ் பொழுதுபோக்கு படம். பவன் கல்யாண் அருமையாக நடித்துள்ளார் என்றார்.

கப்பார் சிங் ஆந்திரா தவிர பிற மாநிலங்கள், உலக அரங்குகளிலும் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதே தபாங் படத்தை தமிழில் ஒஸ்தி என்ற பெயரில் ரீமேக் செய்தனர். சிம்பு, ரிச்சா நடித்த அந்த படம் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை.
Close
 
 

Post a Comment