ஓவியா மானேஜர் அடிக்க பாய்ந்தார் தீபா ஷா பகீர் புகார்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஷூட்டிங் ஸ்பாட்டில் ஓவியாவின் மானேஜர் தன்னை தாக்க வந்ததாகப் பரபரப்பு புகார் கூறியுள்ளார் நடிகை தீபா ஷா. தமிழில், 'யுத்தம் செய்' படத்தில் அறிமுகமானவர் தெலுங்கு நடிகை தீபா ஷா. இப்போது, 'சில்லுனு ஒரு சந்திப்பு' படத்தில் விமல் ஜோடியாக நடித்து வருகிறார். ரவி லவ்லின் என்பவர் இயக்கும் இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோயினாக ஓவியாவும் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் திங்கட்கிழமை மாதவரத்தில் நடந்தது. அப்போது தீபா ஷாவுக்கும் ஓவியாவுக்கும் பிரச்னை ஏற்பட்டதால் ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து தீபா ஷா வெளியேறியதாக செய்தி வெளியானது. நடந்தது என்ன என்பது பற்றி தீபா ஷாவிடம் கேட்டபோது கூறியதாவது:

இந்தப் படத்தில் எனது காட்சிகள் கடந்த சில நாட்களாக படமாக்கப்பட்டு வந்தது. எனக்காக கேரவன் கொடுத்திருந்தனர். திடீரென்று அங்கு ஓவியா வந்தார். 'அரை மணி நேரம் மட்டும் ஓவியா உங்கள் கேரவனில் தங்குவார், அட்ஜஸ்ட் செய்துகொள்ளுங்கள்' என்று பட யூனிட்டை சேர்ந்தவர்கள் கூறினர். நானும் பரவாயில்லை என்று இருந்தேன். மலேசிய சேனல் ஒன்றுக்காக அவர் வீடியோ பேட்டி கொடுக்க இருப்பதாகக் கூறினார். நான் மேக்கப் போட்டுக்கொண்டிருந்தேன். கேரவனுக்குள்ளேயே கேமராவை கொண்டு வந்தனர். இது பிரச்னையாக இருக்கும் என்று சொன்னேன். ஐந்து நிமிடம்தான் என்றார்.

பிறகு இருபது நிமிடம் வரை போய்க்கொண்டிருந்தது. எனக்கு அடுத்த ஷாட் இருப்பதால் மேக்கப் போடுவதற்கு இடைஞ்சலாக இருந்ததை சொன்னேன். வெளியே போகச் சொன்னார்கள். இது எனக்காக கொடுக்கப்பட்ட கேரவன். நான் ஏன் வெளியே போகவேண்டும் என்றேன். பேசிக்கொண்டிருக்கும்போதே ஓவியாவின் மானேஜர் அருண், என்னை அடிக்கப் பாய்ந்தார். எனது மேக்கப் மேன் ஓடிப்போய் அவரை தடுத்தார். எனக்கு ஷாக் ஆகிவிட்டது. இப்படியொரு மோசமான சூழ்நிலையை எதிர்பார்க்கவில்லை. இதையடுத்து நான் வெளியேறிவிட்டேன். பிறகு பட யூனிட், ஓவியாவையும் அருணையும் மன்னிப்புக் கேட்க வைத்தபிறகு நான் ஷூட்டிங்கில் கலந்துகொண்டேன். இதுதான் நடந்தது. நான், 'யுத்தம் செய்' படத்தில் நடித்தபோதே எனக்கு மானேஜராக இருக்கிறேன் என்று அருண் கேட்டார். மறுத்துவிட்டேன். அந்த கோபத்தில் இந்த சம்பவத்தை பயன்படுத்தி மீடியாவுக்கு என்னை பற்றி தவறான செய்தியை அளித்துள்ளார். இதுபற்றி நடிகர் சங்கத்தில் புகார் கொடுக்க இருக்கிறேன்.
இவ்வாறு தீபா ஷா கூறினார்.

ஓவியாவின் மானேஜர் அருணிடம் கேட்டபோது, 'கேரவனில் ஓவியா பேட்டி அளித்தபோது, தீபா ஷா செல்போனில் சத்தமாகப் பேசினார். உடனே ஓவியா, 'பத்து நிமிஷம் அமைதியாக இருங்கள்' என்றார். என்றாலும், அவர் பேசிக்கொண்டே இருந்ததால், இடைஞ்சலாக இருந்தது. நான் தீபா ஷாவிடம், அமைதியாக இருக்கும்படி சொன்னேன். அப்போது தீபா ஷாதான் என்னையும், ஓவியாவையும் தகாத வார்த்தையால் பேசினார். இது அங்கிருந்தவர்களுக்குத் தெரியும்' என்றார்.


 

Post a Comment