பாலா பட வாய்ப்பு போச்சே! - புலம்பும் பூஜா

|

Pooja Disappoints Due Losing Bala Movie   
பாலா படத்தில் நடிக்கவிருந்த வாய்ப்பு நழுவிப் போனது பூஜாவைப் புலம்ப வைத்துள்ளது.

நான் கடவுள் வெளியான பிறகு கிட்டத்தட்ட காணாமல் போய்விட்டார் பூஜா. பெங்களூரில் ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலையில் சேர்ந்துவிட்டார், திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்றெல்லாம் அவரைப் பற்றி அவ்வப்போது செய்திகள்.

இந்த நிலையில் திடீரென சென்னைக்கு வந்த அவர் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆரம்பித்தார்.

இன்னொருபக்கம் பாலா இயக்கும் பரதேசி படத்தில் கதாநாயகியாக பூஜா ஒப்பந்தமானார். இதை உறுதிப்படுத்தி பேட்டியும் கொடுத்தார் பூஜா. ஆனால் திடீரென இப்போது தன்ஷிகாவை கதாநாயகியாக்கியுள்ளார் பாலா. பூஜாவின் கால்ஷீட் பிரச்சினை காரணம் என்று கூறப்பட்டது. இதனால் ஷாக்கான பூஜா, புலம்ப ஆரம்பித்துவிட்டார்.

அவர் கூறுகையில், "பாலா என்னை தன் புதிய படத்தில் நடிக்க தேர்வு செய்தபோது என்னுடைய கேரக்டருக்கு தேசிய அளவில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றார். இதனால் அந்த படத்தில் நடிக்க ஆர்வமாக இருந்தேன். ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் நடிக்க முடியாத சூழல்.

நல்ல வாய்ப்பு பறிபோய்விட்டது. பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் இருந்தேன். ஏமாற்றமாகிவிட்டதே," என்றார்.
 

Post a Comment