'தலைவரின்' உத்தரவை மதித்தார் ரஜினி ரசிகர்.. இடைத் தேர்தலில் போட்டியில்லை!

|

Rajini Fan Withdraws From Poll Cont
சென்னை: புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்து வேட்பு மனு தாக்கல் செய்திருந்த மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற செயலாளர் ஸ்ரீதர் தனது வேட்பு மனுவை இன்று வாபஸ் பெற்றார்.

புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிட ஸ்ரீதர் மனு தாக்கல் செய்ததால் சலசலப்பு ஏற்பட்டது. ரஜினி படம், கொடி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி அவர் ஊர்வலமும நடத்தினார்.

இது ரஜினிக்குப் பிடிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகின. ஸ்ரீதர் போட்டியிலிருந்து விலக வேண்டும் என ரஜினி உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறின. இதே கருத்தை ரஜினியின் உதவியாளர்களில் ஒருவரான சுதாகரும் வெளிப்படுத்தினார்.

ஆனால் ஒட்டுமொத்த ரசிகர்களின் விருப்பத்திற்கு இணங்கவே போட்டியிடும் முடிவை தான் எடுத்ததாக கூறியி்ருந்தார் ஸ்ரீதர்.

இந்த நிலையில் வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளான இன்று தனது மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளார் ஸ்ரீதர். இதன் மூலம் தலைவர் உணர்வுகளை அவர் மதித்துள்ளதாக ரசிகர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Close
 
 

Post a Comment