ஜான் டிரவோல்டா கையைப் பிடிச்சு இழுத்தாரா...?

|

Sex Charge On John Travolta
ஹோட்டலில் மசாஜ் செய்ய வந்த வாலிபரிடம் அத்துமீறி பாலியல் சில்மிஷத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜான் டிரவோல்டா ஈடுபட்டதாக சர்ச்சை வெடித்துள்ளது. ஆனால் இதை டிரவோல்டாவின் பிஆர்ஓ மறுத்துள்ளார்.

டிரவோல்டாவுக்கு 58 வயதாகிறது. இவருடைய படங்களைப் பார்ப்போருக்கு அப்படியே விஜயகாந்த் டைப் படங்களைப் பார்ப்பது போலவே இருக்கும். ஹாலிவுட்டின் விஜயகாந்த் என்று கூட இவருக்குப் பெயர் வைக்கலாம். அப்படி ஒரு 'அதிரிபுதிரி'யான நடிகர் இவர்.

இப்போது டிரவோல்டா மீது செக்ஸ் புகார் எழுந்துள்ளது. அதாவது தனக்கு மசாஜ் செய்ய வந்த வாலிபரிடம் இவர் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டார் என்பதே அந்த சர்ச்சை.

கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி பெவர்லி ஹில்ஸ் ஹோட்டலில் டிரவோல்டா தங்கியிருந்தபோது இந்த சில்மிஷம் நடந்ததாக அந்த நபர் குற்றம் சாட்டியுள்ளார். தனக்கு 2 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கோரி வழக்கும் போட்டுள்ளார்.

ஆனால் இதை டிரவோல்டாவின் செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளார். இது அடிப்படையற்ற பொய் என்று அவர் மறுத்துள்ளார்.

வெளிநாட்டுக்காரர்களிடம் ஒரு நல்ல பழக்கம் உண்டு. தப்பு செய்தால், உடனடியாக இல்லாவிட்டாலும் கூட ஒரு கட்டத்தி்ல பகிரங்கமாக ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்பார்கள். கிளிண்டனே கூட மோனிகா லெவின்ஸ்கி விவகாரத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டவர்தான். அப்படி டிரவோல்டாவும் கேட்பாரா அல்லது வழக்கை சந்தித்து நிரபராதி என நிரூபிப்பாரா.. பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Post a Comment