தமிழ் சீரியல்களை நிறுத்துங்கள்: மலேசியா நுகர்வோர் அமைப்பு கொதிப்பு

|

Call Ban On Violent Tamil Tv Serials In Malaysia
தமிழ்நாட்டில் உள்ள பிரபல தமிழ் சேனல்கள் மலேசியாவில் ஒளிபரப்பாகின்றன. இவை பெரும்பாலும் சீரியல்களையும், சில தொலைக்காட்சி நிறுவனங்கள் செய்திகளையும் ஒளிபரப்புகின்றன.

இந்த தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒளிபரப்பும் நெடுந்தொடர்கள் மலேசியாவில் வசிக்கும் தமிழ் வம்சாவளியினரை பெரிதும் பாதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மலேசியாவில் 28 லட்சத்திற்கும் அதிகமான இந்திய வம்சாவளியினர் வசிக்கின்றனர். இவர்களின் பெரும்பாலோனோர் இந்த டிவி சீரியல்களை பார்க்கின்றனர்.

இந்த டிவி சீரியல்களில் அழுகையும், வன்முறையுமே அதிகம் காணப்படுகிறது என்று மலேசியாவின் பினாங்கு பகுதி நுகர்வோர் அமைப்பினர் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த டிவி சீரியல்களைப் பார்க்கும் இளம் தலைமுறையினர் குற்றவாளிகளாக மாறவும் வாய்ப்புள்ளது. அது மட்டுமல்லாது பெண்கள் தங்கள் குடும்பத்தை கவனிக்காமல் டிவி சீரியல் பார்ப்பதிலேயே நேரத்தை செலவிடுகின்றனர். எனவே வன்முறை காட்சிகள் அடங்கிய டி.வி சீரியல்களை தடை செய்யவேண்டும் அல்லது தணிக்கை செய்யவேண்டும் என்று நுகர்வோர் அமைப்பின் நிர்வாகி என்.வி. சுப்பாராவ் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

Post a Comment