நடிகர் ரவி ராகுலுக்கு மீண்டும் ஹீரோ சான்ஸ்!

|

Ravi Rahul Storm Cinema Again
சின்னத்திரையில் இருந்து மறுபடியும் பெரிய திரை ஹீரோவாக புரமோசன் ஆகியுள்ளார் நடிகர் ரவி ராகுல். தற்போது நாதஸ்வரம் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் அவர் இயக்குநர் திருமுருகனிடம் அனுமதி பெற்றே இதனை ஒப்புக்கொண்டுள்ளாராம்.

ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தில் கஸ்தூரி ராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் ரவி ராகுல். மாங்கல்யம் தந்துனானே, தமிழ்ப் பொண்ணு, மிட்டாமிராசு போன்ற பிரபல படங்களிலும் நடித்திருக்கிறார்.

சினிமா வாய்ப்பு குறைந்ததை அடுத்து சீரியல்கள் பக்கம் கவனத்தை திருப்பினார். ரவிராகுல் இதுவரை 53 சீரியல்களுக்கு மேல் நடித்துள்ள போதிலும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாதஸ்வரம் தொடரில் செல்வரங்கம் கதாபத்திரம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்துள்ளது. இவருக்கு தற்போது மீண்டும் பெரியதிரையில் பொல்லாங்கு படத்தின் நாயகனாக வாய்ப்பு கிடைத்துள்ளது.

சினிமாவில் மீண்டும் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் தனக்கு பெயர் வாங்கி தந்த நாதஸ்வரம் தொடரில் நடிப்பதை தவற விட கூடாது என்று நாதஸ்வரம் தொடரின் இயக்குனர் திருமுருகனின் அனுமதி கிடைத்த பின்பே பெரியதிரையில் நடிக்க ஒப்புக் கொண்டாராம். சின்னத்திரையில் நடிக்க வந்த பிறகு பெரிய திரையில் மீண்டும் ஹீரோவாக நடிப்பது அநேகமாக இவராகத்தான் இருக்கும்.
Close
 
 

Post a Comment