மெஜஸ்டிக் மல்டி மீடியா தயாரிக்கும் படம், 'மிரட்டல்'. விநய், ஷர்மிளா, பிரபு, சந்தானம், கஞ்சா கருப்பு, மன்சூரலிகான், பாண்டியராஜன் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, டி.கண்ணன். இசை, பிரவீன் மணி. பாடல்கள்: வாலி, பா.விஜய், கபிலன். இப்படத்தின் பாடல் சி.டியை வெளியிட்ட இயக்குனர் ஆர்.மாதேஷ், நிருபர்களிடம் கூறியதாவது: விநய்க்கு இருக்கும் 'சாக்லெட் பாய்' இமேஜை இப்படம் மாற்றும். ஷர்மிளாவுக்கு கூத்துப்பட்டறையில் நடிப்பு மற்றும் தமிழில் பேச பயிற்சி அளிக்கப்பட்டது. சந்தானம், கஞ்சா கருப்பு கூட்டணி சிரிக்க வைக்கும். லண்டன் பாராளுமன்றம் மீது விமானம் பறந்து செல்ல விசேஷ அனுமதி வாங்கி படப்பிடிப்பு நடத்தினோம். மேலும் வெந்நீர் ஊற்றுகளுக்கு மத்தியிலும், ஐதராபாத் நிஜாமுக்குச் சொந்தமான பிரமாண்ட பங்களாவிலும், சென்னையில் சிவாஜி வீட்டின் உட்புறமும் முக்கிய காட்சிகள் படமானது. கோபத்தால் எதையும் சாதிக்க முடியாது. எவ்வளவு பெரிய பிரச்னையையும் சுலபமாகவும், காமெடியாகவும் எடுத்துக்கொண்டு அணுகினால் அது காணாமல் போய்விடும் என்ற மெசேஜை சொல்லும் இப்படம், இம்மாதம் வருகிறது.
Post a Comment