பொது இடத்தில் சிகரெட் பிடித்த குற்றத்துக்காக நடிகர் ரன்பீர் கபூரை வரும் ஜூலை 26-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உதய்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உதய்பூரில் நடந்த ஏ ஜவானி ஹை திவானி என்ற படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டபோது, பொது இடத்தில் ரன்பீர் கபூர் புகைப் பிடித்த காட்சியை சிலர் புகைப்படம் எடுத்து வெளியிட்டுவிட்டனர்.
இதைத் தொடர்ந்து அவர் மீது குற்றப்பிரிவு 156 (3)ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் நேற்று அவர் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.
இதைத் தொடர்ந்து வரும் ஜூலை 26-ம் தேதி கட்டாயம் ரன்பீர் நேரில் ஆஜராக வேண்டும் என உதய்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ரன்பீர் கபூர்6 மாத சிறைத் தண்டனை அல்லது ரூ 200 அபராதம் செலுத்த வேண்டி வரும்.
Post a Comment