சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படத்தில் பணியாற்ற கல்லூரி மாணவர்கள் 42 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவருமே அரசின் ஓவியம் மற்றும் நுண் கலைக் கல்லூரிகளில் படித்துக் கொண்டிருப்பவர்கள்.
பாரிமுனையில் உள்ள காலேஜ் ஆப் பைன் ஆர்ட்ஸ் கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் 42 பேரை நேரடியாக தேர்வு செய்த இயக்குநர் சௌந்தர்யா, அவர்களை கலை இயக்குநர் வேலுவின் கீழ் பணியமர்த்தியுள்ளார்.
கோச்சடையானின் வரைகலை மற்றும் டிசைன்கள் வடிவமைப்பில் இவர்களின் பங்களிப்பும் இடம்பெறுகிறது.
இவர்களைத் தவிர, கும்பகோணத்தில் உள்ள காலேஜ் ஆப் பைன் ஆர்ட்ஸைச் சேர்ந்த 8 ஆண்டுகால அனுபவம் வாய்ந்த 50 கலைஞர்களும் கோச்சடையானுக்காக பணியாற்றுகின்றனர்.
இந்த 92 பேர் தவிர, கான்செப்ட் ஆர்டிஸ்ட் என்ற வகையில் மேலும் 60 பேர் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் மிக உயர்ந்த தொழில்நுட்பத்தில் வரும் படம் என்ற பெருமை கொண்ட கோச்சடையானை ஒவ்வொரு அங்குலமும் மிகுந்த கவனமெடுத்து இந்தப் படத்தை செதுக்கி வருகிறார்கள்.
Post a Comment