சீரியல் என்றாலே அதை வருடக்கணக்கில் இழுக்க வேண்டும் என்று எழுதப்படாத விதியாகிவிட்டது. அதை உடைத்து புதிய வரலாறு படைத்துள்ளது பாலிமர் டிவி. 777 என்ற பெயரில் புதிய முயற்சியை தொடங்கியுள்ளது. வெள்ளித்திரையில் வெற்றிக் கொடி நாட்டிய இயக்குநர்கள் அகத்தியன், மனோபாலா, `சிட்டிசன்' சரவணசுப்பையா, தாய் செல்வா ஆகியோர் ஒவ்வொரு வாரமும் ஒரு கதையை இயக்குகின்றனர்.
கதையின் தலைப்பே வித்தியாசமாக இருக்கிறது. அம்மி மிதிச்சாச்சு, அருந்ததி பார்த்தாச்சு என்ற கதையில் சின்னத்திரை தம்பதிகள் பிரஜீன் - சான்ட்ரா நடித்துள்ளனர். அதேபோல் அட்சதை தொடரும் அருமையான கதை அமைப்புடன் அன்பை உணர்த்தும் கதையாக அமைந்துள்ளது.
777 மினி தொடரை பிரபுநேபால் தயாரித்துள்ளார். பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் இந்த தொடர் திங்கள் முதல் ஞாயிறுவரை ஒளிபரப்பாகிறது. 777 தொடர் ஆரம்பத்திலேயே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment