குளோபல் ஒன் ஸ்டூடியோஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிக்கும் படம், 'சாருலதா'. இதில் இரண்டு வேடங்களில் பிரியாமணி நடிக்கிறார். மற்றும் மலையாள நடிகர் ஸ்கந்தா, சீதா, சரண்யா பொன்வண்ணன், ஆர்த்தி உட்பட பலர் நடிக்கின்றனர். கே.பாக்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரிடம் இணை இயக்குனராகப் பணியாற்றிய பொன் குமரன் இயக்குகிறார். வசனம் சபரிநாதன், யோகானந்த், எம்.வி.பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்கிறார். சுந்தர்.சி. பாபு இசை அமைக்கிறார். தாய்லாந்து படமான 'அலோன்' என்ற படத்தின் இன்ஸ்பிரேஷனில் இது உருவாக்கப்படுகிறது. ஒட்டிப்பிறந்த இரண்டு பெண்குழந்தைகளை பற்றிய கதையான இதன் தெலுங்கு பதிப்பை அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸ், கன்னடப் பதிப்பை துவாரகிஷும் தயாரிக்கின்றனர்.
Post a Comment