ரமணா இந்தி ரீமேக்கில் ஷாருக்கான்: ஜோடி ஐஸ்வர்யா ராய்?

|

Shah Rukh Khan Act Ramanaa Remake
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான ரமணாவை இந்தியில் ரீமேக் செய்கின்றனர். அங்கு விஜயகாந்த் ரோலில் ஷாருக்கான் நடிக்கிறார்.

தற்போது பாலிவுட்டில் தமிழ் படங்களின் ரீமேக்குகள் தான் சக்கைப் போடு போடுகிறது. கஜினி, போக்கிரி ரீமேக் வாண்டட், பந்தா பரமசிவம் ரீமேக் ஹவுஸ்புல் 2, சிங்கம், சிறுத்தை ரீமேக் ரவுடி ரத்தோர் உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன. இதனால் தென்னிந்திய படங்கள் குறிப்பாக தமிழ் படங்களை இந்தியில் ரீமேக் செய்ய நடிகர்களும், தயாரிப்பாளர்களும் ஆர்வமாக உள்ளனர்.

இந்நிலையில் இதுவரை தென்னிந்திய படங்களின் ரீமேக்கில் நடித்திராத பாலிவுட் பாதுஷா ஷாருக்கான் முதன்முதலாக ரமணா ரீமேக்கில் நடிக்கிறார். இந்தியிலும் ஏ.ஆர். முருகதாஸ் தான் இந்த படத்தை இயக்குகிறாரா என்று தெரியவில்லை. ரவுடி ரத்தோரை தயாரித்த சஞ்சய் லீலா பன்சாலி தான் இந்த படத்தை தயாரிக்கிறார்.

இந்த படத்தில் சிம்ரன் ரோலில் ஐஸ்வர்யா ராய் நடிப்பார் என்று கூறப்படுகிறது. பிரசவத்திற்கு பிறகு திரையுலகை விட்டு ஒதுங்கியிருக்கும் ஐஸ் இந்த படத்தின் மூலம் தனது அடுத்த எபிசோடை துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Post a Comment