ஆசாமி என்ற படத்தில் போலிச் சாமியார் வேடத்தில் ஷகீலா நடித்துள்ள காட்சிளுக்கு தனிக்கைக் குழு கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளதாம். அவர் பீர் குடிப்பது போலவும், சிகரெட் பிடிப்பது போலவும், பீரானந்தாஜி என்று பெயர் வைக்கப்பட்டதற்கும் தணிக்கைக் குழு எதிர்ப்புத் தெரிவித்து, ஷகீலா சம்பந்தப்பட்ட காட்சிகளில் 10இடங்களில் கத்திரி போட்டு விட்டனராம்.
ஒரு காலத்தில் ஷகீலா படம் என்றால் தியேட்டர்கள் அல்லோகல்லப்படும். கேரளாவை கிறங்கிப் போய்க் கிடந்தது ஷகீலாவின் அலையில் சிக்கி. ஆனால் இப்போது அமைதியான நதியாக மாறி விட்டார் கவர்ச்சிக் கடலான ஷகீலா. தமிழில் காமெடிப் படங்களில் லேசு பாசாக கவர்ச்சியைக் கலந்து நடித்து வருகிறார். சந்தானம் தனது படங்களில் தொடர்ந்து ஷகீலாவுக்கு நல்லாதரவு அளித்து வருகிறார்.
இந்த நிலையில் ஷகீலா நடித்துள்ள புதிய படம் ஆசாமி. இதில் அவர் போலிச் சாமியாரினியாக வருகிறார். பீர் குடித்தும் சிகரெட் பிடித்தும் குறி சொல்லும் சாமியாராக அவர் வருகிறாராம். அவரது பெயர்கூட பீரானந்தாஜியாம்.
அவருடைய கூட்டாளிகளாக சந்தானபாரதி, பாண்டு, நெல்லை சிவா, அனுமோகன் என ஒரு கூட்டமே நடித்துள்ளது. படத்தை முடித்து சென்சார் அதிகாரிகளிடம் கொடுத்து சான்றிதழ் கேட்டுள்ளனர்.
படத்தைப் பார்தத் சென்சார்காரர்கள், குறிப்பாக ஷகீலா தொடர்பான சீன்களைப் பார்த்து அதிர்ந்து போய் விட்டனராம். ஒட்டுமொத்த சாமியார்களும் இப்படித்தான் என்பதைப் போல சித்தரித்துள்ளீர்களே என்று கூறிய அவர்கள் மொத்த சீனையும் தூக்கினால்தான் சான்றிதழ் தருவோம் என்று கூறி விட்டனர். ஆனால் இயக்குநரும், தயாரிப்பாளரும் மறுக்கவே அப்பீலுக்குப் போனார்கள்.
அங்கும் ஷகீலா அன்கோவின் சீன்களுக்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 10 இடங்களில் வெட்ட தயாரிப்பாளர் தரப்பு ஒத்துக் கொண்டது. இதையடுத்து அந்த கட்டோடு, படத்துக்கு யுஏ சான்றிதழ் கொடுத்து அனுப்பி வைத்துள்ளனராம்.
பரவாயில்லை, முன்பெல்லாம் ஷகீலா படம் என்றால் மொத்த படத்தையுமே வெட்ட வேண்டியிருக்கும், இப்போது பத்து சீனோடு போச்சே...!
Post a Comment