சுத்தக்காரி ஜெனீபர் லோபஸ்... அப்படியே 'உட்கார' மாட்டாராம்!

|

Jennifer Lopez Makes Bum Rider Deal

பாப் தேவதை ஜெனீபர் லோபஸ் ரொம்ப சுத்தக்காரியாக மாறியுள்ளார். எங்கு போனாலும் அங்குள்ள டாய்லெட்களை அவர் அப்படியே பயன்படுத்த மாட்டாராம். மாறாக, தன்னுடன் கூடவே கொண்டு போகும் குஷன் பொருத்தப்பட்ட இருக்கையை தூக்கி டாய்லெட் மீது வைத்து அதன் பிறகுதான் உட்காருவாராம்.

இங்கிலாந்து ராணிக்கு அடுத்து லோபஸ்தான் இப்படி ரொம்ப சுத்தம் பார்ப்பதாக அந்தப் பக்கத்தில் பேச ஆரம்பித்துள்ளனர். வழக்கமாக இங்கிலாந்து ராணி எலிசபெத்தும் இப்படித்தான். அவர் எங்கெல்லாம் போகிறாரோ அங்குள்ள டாய்லெட்களில் நேரடியாக அவர் உட்கார மாட்டார். அவருக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள குஷன் பொருத்தப்பட்ட மேல் இருக்கையை டாய்லெட் மீது வைத்து அதன் மேல்தான் அவர் உட்காருவார்.

தேவையில்லாத கிருமிகள், பாக்டீரியா உள்ளிட்டவை தாக்கி விடாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக இப்படிச் செய்வது ராணியின் வழக்கம். தற்போது இதே பாணியை கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளாராம் லோபஸ்.

இதுகுறித்து அவருக்கு நெருக்கமான ஒரு தரப்பு கூறுகையில் தனது பின்னழகின் மீது கவனம் கொண்டுள்ளார் லோபஸ். அதில் கிருமி பாதிப்பு உள்ளிட்டவை ஏற்பட்டு பாழ்பட்டு விடாமல் தடுப்பதற்காக தற்போது குஷன் பொருத்தப்பட்ட இருக்கை ஒன்றை தயாரித்துள்ளார். அதை டாய்லெட் மீது வைத்து அதன் மேல்தான் அமர்கிறார் அவர் என்று அத்தகவல் கூறுகிறது.

இந்த குஷன் ரெடிமேட் டாய்லெட் இருக்கையானது, அனைத்து விதமான வெஸ்டர்ன் டாய்லெட்களுக்கும் பொருந்துவது போல அமைக்கப்பட்டுள்ளதுதான் அதன் விசேஷமே...

ஒரு வேளை முண்டுவேலம் பட்டி பக்கமோ அல்லது சுண்டக்காய் பட்டி பக்கமோ லோபஸ் டூர் வந்தால் என்ன செயவார்....??

 

Post a Comment