ஆர்.எம்.எஸ். புரொடக்ஷன் சார்பில் எஸ்.ஜீவானந்தம் தயாரிக்கும் படம், 'பேய்'. அகரம், ஸ்ரீரேவதி என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். பப்லு ஒளிப்பதிவு. ஜே.மஹாலட்சுமி இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது, ' தமிழ் நாட்டில் பெண்கள் பேய் பிடித்து ஆடுவது காலம் காலமாக நடந்து வருகிறது. இது ஏன், எப்படி? பேய் உண்மையில் இருக்கிறதா இல்லையா என்பதை பற்றிய படம். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு மாதிரியான பேய் பிரச்னைகள் இருக்கிறது. அதையும் பதிவு செய்கிறோம்'' என்றார்.
Post a Comment