தனுஷின் அடுத்த திரைப்படத்திற்கு தலைப்பு 'சொட்ட வாழக்குட்டி' என வைக்கப்பட்டிருப்பதாக புதுதகவல் வெளிவந்திருக்கிறது. இயக்குனர் சற்குணத்துடன் இந்த திரைப்படத்திற்காக தனுஷ் இணையவுள்ளாராம். எனினும் கதாநாயகி, தயாரிப்பாளர் என்பன இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. ரொமாண்டிக் காமடி ட்ரேக்கில் இந்த திரைப்படம் உருவாக போகிறதாம். கொஞ்சநாட்களுக்கு முன்னர் தான், தனுஷின் அடுத்த புராஜக்ட் -மறியான்- என்றார்கள். அதற்குள் அடுத்த தலைப்பு இந்த பெயரில் அடிபடுகிறது. தனுஷ் தயாரிப்பாளர் அவதாரம் முதல் திரைப்படத்திற்கு அண்மையில் 'எதிர் நீச்சல்' என தலைப்பிட்டிருந்தார்கள். 3 திரைப்படத்திற்கு பிறகு தனுஷின் நெருங்கிய தோஸ்தாக மாறிவிட்ட சிவ கார்த்திகேயன் தான் இப்படத்தில் ஹீரோ. ஹீரோயினுக்கு 180, வாமணம் திரைப்படங்களை பார்த்து தனுஷ் ரொம்பவே இம்பிரஷனாகிப்போன பிரியா ஆனந்த்தை பரிந்துரைத்திருக்கிறாராம்.
Post a Comment