பொதுவாக ரஜினி படம் வந்தால், அதற்கு போட்டியாக இருக்க வேண்டாமே என்று மற்ற படங்களைத் தள்ளி வைத்துத்தான் பார்த்திருக்கிறோம்.
இந்த முறை ரஜினி படமே கொஞ்சம் தள்ளிப் போகிறது, வேறொரு படத்துக்காக. அது கோச்சடையான்.
தமிழில் இந்தப் படத்துக்கு எந்தப் போட்டியும் இல்லை. எப்போது ரிலீசானாலும், தங்கள் படத்தை தள்ளி வைத்துக் கொள்ள அனைவரும் விரும்புவர்.
ஆனால் பாலிவுட்டில் நிலைமை வேறு. கோச்சடையான் படத்தின் ஹீரோயின் தீபிகா படுகோனேவுக்கு இப்போது பாலிவுட்டில் கொஞ்சம் டல்லான சூழல்.
அவருக்கு இப்போது தொழில் போட்டியாளரான சோனாக்ஷி நடித்த 'சன் ஆப் சர்தார்' படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இந்தப் படத்தோடு கோச்சடையான் வெளியானால், தீபிகாவுக்குள்ள டல் மார்க்கெட் காரணமாக வசூல் பாதிக்குமோ என தயாரிப்பாளர் நினைக்கிறாராம். அதனால் படம் தள்ளிப் போகும் என்கிறார்கள்.
ஆனால் சன் ஆப் சர்தார் குழுவினரோ, நாங்கள் சூப்பர் ஸ்டார் படத்தோடு போட்டிபோடவில்லை. காரணம் அந்தப் பட வசூல் பெரும்பாலும் தென்னிந்தியாவைத்தான் மையப்படுத்தியுள்ளது. அங்கெல்லாம் எங்கள் படம் ஒரு பொருட்டே இல்லையே, என்கிறார்கள்.
சூப்பர் ஸ்டார் படத்துக்கு இப்படி ஒரு சோதனையா!
Post a Comment