இரண்டு குழந்தைகள் இருப்பதால் அவர்களை கவனித்துவிட்டுதான் சீரியல்களின் கவனம் செலுத்துகிறேன் என்று நடிகை தேவயானி கூறியுள்ளார். தற்போது முத்தாரம் தொடரில் போலீஸ் அதிகாரியாக நடிப்பது மிகவும் பிடித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனியார் நகைக்கடை ஷோரும் ஷோரூம் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக தனது கணவர் டைரக்டர் ராஜகுமாரனுடன் திருநெல்வேலிக்கு வந்த நடிகை தேவயானி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சினிமாவைப் போல சின்னத்திரையிலும் பெயர் சொல்லும்படியான கதாபாத்திரங்கள் எனக்கு கிடைக்கின்றன. எங்களுக்கு இனியா, பிரியங்கா என இரு குழந்தைகள் உள்ளனர். இனியா 2-ம் வகுப்பு படிக்கிறாள். பிரியங்கா யூ.கே.ஜி. படிக்கிறாள்.
குழந்தைகளை கவனிக்க வேண்டும் என்பதற்காகவே அவுட்டோர் சூட்டிங்கில் அதிகமாக நான் பங்கேற்பதில்லை. ஏனெனில் முதலில் குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
தற்போது முத்தாரம் டி.வி. தொடரில் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்து வருகிறேன். போலீஸ் சீருடை அணிந்ததுமே ஒரு கம்பீரமும், மிடுக்கும் வருகிறது. நானே எதிர்பாராத அளவுக்கு அந்த கேரக்டரில் மிக இயல்பாக நடித்து வருகிறேன்.
தற்போது சின்னத்திரையிலேயே முழு கவனம் செலுத்தி வருகிறேன். கதைக்கு ஏற்ற கேரக்டர்கள் அங்கு கிடைக்கின்றன. போலீஸ் கேரக்டரில் நடிப்பது எனக்கு பெருமையாக உள்ளது. சண்டை காட்சிகளில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்.
Post a Comment