சிரஞ்சீவி மகன் கல்யாணத்துக்கு போகும் ரஜினி-கமல்

|

Rajini Kamal Grace Chiranjeevi Son Wedding

தெலுங்கு நடிகரும், அரசியல்வாதியுமான சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜாவின் திருமண விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், கமல் ஹாசனும் கலந்து கொள்கின்றனர் என்று கூறப்படுகிறது.

தெலுங்கு நடிகரும், அரசியல்வாதியுமான சிரஞ்சீவியின் மகனும், தெலுங்கு நடிகருமான ராம்சரண் தேஜா வரும் 14ம் தேதி அப்போலோ மருத்துவமனைகளின் உரிமையாளர் பிரதாப் ரெட்டியின் பேத்தி உபசனா கமினேனியை மணக்கிறார். திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறது. இந்த திருமண விழாவில் தென்னிந்திய திரையுலகினர் தவிர பாலிவுட்டைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

சிரஞ்சீவி தனது நெருங்கிய நண்பர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசனை திருமண விழாவிற்கு அழைத்துள்ளார். அவர்கள் வரும் 14ம் தேதி ஹைதராபாத்தில் நடக்கும் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

ராம் சரணின் திருமண கொண்டாட்டங்கள் இன்று சங்கீத நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. அண்ணபூர்ணா ஸ்டுடியோசிஸ் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் ஸ்ரேயா சரண், தமன்னா, நடிகர் அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் நடனமாடவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment