சல்மான்கான் கல்யாணம் பண்ணுவாரா மாட்டாரா என்பது பாலிவுட் ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வி!
அவரும் இதோ அதோ என இழுத்துக் கொண்டே, படங்களில் வெற்றுடம்பைக் காட்டி ரசிகைகளைச் சூடேற்றி வருகிறார்.
ஆனாலும் யாரும் அவரிடம் நேரடியாக திருமணம் பற்றி பேசுவதில்லை. இந்தக் குறையைத் தீர்த்து வைத்திருக்கிறது, அவரது நடிப்பில் வரும் ஏக் தா டைகர் படம்.
இந்தப் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. அதில் ஒரு காட்சியில், சல்மான்கானைப் பார்த்து, 'கல்யாணம் பண்ணிப்பீங்களா மாட்டீங்களா.. சட்டு புட்டுனு ஒரு கல்யாணத்தைப் பண்ணுங்க... இப்பவே ரொம்ப லேட்டாகிடுச்சி" என நேரடியாகவே கேட்பது போல வைத்திருக்கிறார்களாம்.
ரசிகர்களுக்கு இந்த காட்சிகள் சுவாரஸ்யமான அனுபவத்தைத் தரும் என்கிறார்கள் யாஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தினர்.
சல்மான்கான் - கத்ரீனா கைப் காதல் பாலிவுட்டில் ரொம்ப நாட்களாக கிசுகிசுக்கப்பட்டு வரும் ஒன்று. கத்ரீனாவை சல்மான் திருமணம் செய்யக் கூடும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், அவரே சல்மானப் பார்த்து எப்போ கல்யாணம்? என்று கேட்பது சுவாரஸ்யம்தானே!!
Post a Comment