சினேகா- பிரசன்னா திருமணம் சமீபத்தில் நடந்தது. திருமணத்துக்கு பின் சினேகா சினிமாவில் நடிப்பாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அவர் விரும்பினால் தொடர்ந்து நடிக்கலாம் என்று பிரசன்னா கூறினார். நடிப்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்று சினேகா தெரிவித்தார். இப்போது கமிட்மெண்ட்களை ஓரளவு முடித்துவிட்டு இந்த புதுமண தம்பதி ஹனிமூன் சென்றிருக்கிறார்கள். சினேகா சொன்ன அந்த ஹனிமூன் ஸ்பாட் அமெரிக்கா. அச்சமுண்டு அச்சமுண்டு படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்த போதுதான் சினேகாவுக்கும், பிரசன்னாவுக்கும் காதல் மலர்ந்தது. அந்த மலரும் நினைவுக்காக அமெரிக்காவுக்கு ஹனிமூன் சென்றிருக்கிறக்ர்கள். காதல் பிறந்த இடத்திலேயே ஹனிமூன்...
Post a Comment