கோவையில் குடியேறுகிறாரா ரஜினி?

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ரஜினிகாந்த் விரைவில் கோவையில் குடியேறுகிறார் என்ற தகவல் வெளியானது. அது பற்றி அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்: ரஜினிகாந்த் அமைதியாக வாழ்க்கை நடத்துவதற்காக கோயம்புத்தூரில் குடியேறப்போவதாக ஆதார மற்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. இது யாரோ இட்டுக்கட்டி கூறியது. சூப்பர் ஸ்டார் எந்த இடத்திற்கும் இடமாறி குடிபோகவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன் ரஜினி உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதை தாங்க முடியாமல் ரசிகர்கள் வேதனை அடைந்தார்கள். அப்போதும் அவரது உடல்நலன் குறித்து பல்வேறு வதந்திகள் கிளப்பப்பட்டன. ஆனால் அவர் குணமாகி மக்கள் முன் நலமுடன் நடமாடிக்கொண்டிருக்கிறார். கடந்த 2 வாரத்துக்கு முன் கன்னட நடிகர் அம்பரீஷின் 60வது பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டார். அடுத்து சிரஞ்சீவி மகன் திருமணத்தில் பங்கேற்றதுடன் சமீபத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசினார். இதற்கிடையில் Ôகோச்சடையான்Õ ஷூட்டிங்கிற்காக ஹாங்காங், லண்டன், கேரளா என்று பறந்துகொண்டிருக்கிறார். தனுஷ், ஐஸ்வர்யா விஷயத்தில் அவர் சஞ்சலம் அடைந்ததாக எழுந்த வதந்திகளும் பொய் ஆகிவிட்டது. இதுபோன்ற தகவல்களுக்கு ரஜினி எந்தநேரத்திலும் பதில் அளித்தது கிடையாது. தனது நடவடிக்கைகளால் அதற்கு விளக்கம் கொடுத்துவிடுவார். இந்நிலையில் அவர் கோவையில் குடியேறுகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவர் நிச்சயமாக சென்னையில்தான் தங்கி இருப்பார். இவ்வாறு அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Post a Comment