நடிப்புக்கு குட்பை சொல்ல ரெடி, ஆனால்...: பிரியா ஆனந்த்

|

Priya Anand Ready Say Goodbye Films   

நடிகை பிரியா ஆனந்த் நல்ல மாப்பிள்ளை கிடைத்தால் நடிப்புக்கு குட்பை சொல்லத் தயாராக உள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை பிரியா ஆனந்த். சித்தார்த்துடன் அவர் நடித்த நூற்றெண்பது படம் தான் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. அதன் பிறகு கழுகு படத்தில் கெஸ்ட் ரோலில் வந்த அவர் தற்போது எதிர்நீச்சல் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

வழக்கமாக நடிகைகள் நடிக்க வந்த புதிதில் பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வேண்டும், நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும், நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று பெரிய வேண்டும் பட்டியல் வைத்திருப்பார்கள். வாய்ப்பு கிடைக்கும் வரை நடித்துவிட்டு மார்க்கெட் இல்லாமல் போன பிறகு திருமணத்தை பற்றி யோசிக்கலாம் என்றே பலர் நினைக்கிறார்கள். அதில் பிரியா ஆனந்த் சற்றே வித்தியாசமாக உள்ளார்.

அவர் நடிக்க வந்து இன்னும் 10 படங்களில் கூட நடித்து முடிக்கவில்லை. ஆனால் அதற்குள் நடிப்புக்கு முழுக்கு போட தயாராகிவி்ட்டார். ஆனால் ஒரு கன்டிஷன் நல்ல மாப்பிள்ளை கிடைத்தால் மட்டுமே திரையுலகை விட்டுச் செல்வாராம்.

 

Post a Comment