ஷங்கர் படத்திலிருந்தும் சமந்தா நீக்கம்?!!

|

Samantha Of Shankr S I   

சமந்தாவுக்கும் கோலிவுட்டுக்கும் ராசியில்லை போலிருக்கிறது. அதுவும் யாருக்கும் கிடைக்காத பெரிய வாய்ப்புகள் கிடைத்தும், அவற்றைத் தக்க வைத்துக்கொள்ள முடியாத நிலை.

முன்பு மணிரத்னம் படத்திலிருந்து விலகிக் கொண்ட சமந்தா, இப்போது ஷங்கரின் ஐ படத்திலிருந்தும் அவர் விலகக் கூடும் என செய்தி வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சமந்தாவுக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில், "சமந்தாவுக்கு சருமத்தில் சில பிரச்சினைகள் உள்ளன. அதற்காக அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார்.

டாக்டர்கள் அவரை 3 மாதங்கள் தொடர்ந்து சூரிய ஒளி, கடல் காற்று படாமல் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். இதற்காகத்தான் மணிரத்னம் படத்தையே அவர் வேண்டாம் என்றார்.

ஷங்கர் எப்படியும் இரண்டு மூன்று மாதங்கள் தள்ளிதான் படத்தை ஆரம்பிப்பார் என நம்பினார் சமந்தா. ஆனால் அவரோ திடுமென்று அடுத்த வாரம் ஷூட்டிங் என்று கூறியுள்ளார். அதுவும் சென்னையில் பாடல்காட்சி. எப்படியும் ஜூலை முழுக்க இந்த பாடல் காட்சி எடுக்கப்படும். எனவே சூரிய வெளிச்சம், ஷூட்டிங்கில் அதிக வெப்பத்தை உமிழும் விளக்குகள் வெளிச்சத்தை அவர் சருமம் தாங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே அவர் இந்தப் படத்தில் நீடிப்பாரா என்ற நிலை," என்றார்.

இதுகுறித்து ஷங்கர் தரப்பில் விசாரித்தபோது, உதடுகளை இறுக்க மூடிக் கொண்டு கண்களாலே 'தெரியாது' என்றனர்!!

 

Post a Comment