சின்னத்திரை, சீரியல், சினிமா, அரசியல் என ஒரு ரவுண்ட் சென்று விட்டு நீண்ட இடைவேளைக்குப் பின்னர் சின்னத்திரையில் வாழ்வே மாயம் சீரியலில் களம் இறங்கியுள்ளார் நடிகை புவனேஸ்வரி. சவுபர்ணிகாவில் தொடங்கி வாழ்வே மாயம் வரை அவரின் பயணம் குறித்து அவரிடமே கேட்போம்.
சவுபர்ணிகா சீரியல் தொடங்கி வாழ்வே மாயம் வரை 50க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்து விட்டேன். பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்திருக்கிறேன். என் வாழ்க்கையில் எத்தனையோ சவால்களை சந்தித்து இப்போது மீண்டும் சீரியல் பயணத்தை தொடங்கியிருக்கிறேன்.
சினிமாவை விட சீரியலுக்குத்தான் நான் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பேன். எனக்கு நல்ல பெயர் வாங்கித்தரக்கூடிய கதாபாத்திரங்கள் அங்குதான் அமைகின்றன. வில்லி காதாபாத்திரம் தானாக அமைகிறது. இருந்தாலும் அது எனக்கு பிடித்திருக்கிறது.
என்னுடைய கண்கள்தான் எனக்கு ப்ளஸ் பாய்ண்ட். அதேபோல் ஐஸ்வர்யா ராயின் கண்களையும், அவரின் அழகையும் பார்த்து நான் பொறாமை பட்டிருக்கிறேன்.
பொதுவாகவே எனக்கு முன்கோபம் அதிகம் வரும். அப்பொழுது எனக்கே என்மீது பயம் ஏற்படும். அந்த கோபம்தான் என் வாழ்க்கையில் பல கசப்பான அனுபவங்களை ஏற்படுத்திவிட்டது. அதை மறக்க நினைக்கிறேன்.
எனக்கு அரசியல் வாழ்க்கை தானாக அமைந்து விட்டது. நடிகையானதை நினைத்து ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. ஆனால் திருமணமாகி செட்டில் ஆகி இருக்கலாமோ என்று எப்போதவாது நினைத்துக்கொள்வேன் என்று கூறிவிட்டு சிரித்தார் சின்னத்திரை வில்லி புவனேஸ்வரி.
Post a Comment