நடிகர் அஜ்மல், இந்த நடிகைதான் தன்னுடன் நடிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்வதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது கூறியதாவது: இது தவறான தகவல். நான் யாரையும் சிபாரிசு செய்வதில்லை. சில இயக்குனர்கள் என்னிடம் கதை சொல்லும்போது எனக்கு ஜோடியாக உள்ள கேரக்டர் பற்றியும் சொல்வார்கள். அப்போது இந்த கேரக்டருக்கு இந்த நடிகை நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்ற என் கருத்தைச் சொல்வேன். அதை வற்புறுத்தமாட்டேன். அவர்கள் வேறு யாரை நடிக்க வைத்தாலும் வருத்தமும் படமாட்டேன். ஹீரோயினுக்கு மட்டுமல்ல, மற்ற கேரக்டர்களுக்கும் இவரைப் போட்டால் நன்றாக இருக்கும் என்று கூறுவேன். அதை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் அவரவர் விருப்பம். தற்போது நடித்து வரும், 'வெற்றிச்செல்வன்' படத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் வேடம். யதார்த்தமான கேரக்டர். நானே டாக்டருக்கு படித்தவன் என்பதால் என் மாணவக்கால பருவத்தை பிரதிபலித்திருக்கிறேன். 'கருப்பம்பட்டி' படத்தில் அப்பா, மகன் என்ற இரு வேடத்தில் நடிக்கிறேன். 'கோ' படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த டீம் மாறிப்போனதால் வாய்ப்பும் கைவிட்டுப்போனது.
Post a Comment