சிசுக்கொலைக்கு எதிரான படம்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஷில்பா மோஷன் ஒர்க்ஸ், வேர்ல்ட் லைப் ப்ளிக் நிறுவனங்கள் சார்பில் விவேக் தீக்ஷித், சுசாந்த் கர்டு தயாரிக்கும் படம், 'மடிசார் மாமி மதன மாமா'. மிதுன், ரிஷி பூட்டானி, மான்சி, காயத்ரி, புனீத் எஸ்ஸர் உட்பட பலர் நடிக்கின்றனர். கதையின் நாயகியாக 3 வயது அஞ்சலி நடிக்கிறாள். ஒளிப்பதிவு, கபில் கே.கவுதம். இசை, எல்.வி.கணேசன். பாடல்கள்: யுகபாரதி, பழனிபாரதி, முத்து விஜயன். கதை, ரவி பிரகாஷ். வசனம்: சுதேசிகன், ரவி பிரகாஷ். திரைக்கதை எழுதி, எடிட்டிங் செய்து, படத்தை இயக்கும் ரஞ்சித் போஸ், நிருபர்களிடம் கூறியதாவது:

முழுநீள காமெடிப் படம் இது. ஆபாச காட்சிகளோ, இரட்டை அர்த்த வசனங்களோ படத்தில் இருக்காது. தியேட்டருக்கு குழந்தைகளுடன் வந்து பெற்றோர்கள் பார்க்க வேண்டிய முக்கியமான படம். பெண் சிசுக் கொலைக்கு எதிராக குரல் கொடுக்கும் கதை. பெண் குழந்தைகளை வெறுக்கும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வுப் படமாகவும் அமையும். 2 ஆயிரம் வருடங்கள் பழமையான கோயிலில் முக்கிய காட்சிகள் படமாகியுள்ளன. ரிஷி பூட்டானி, காயத்ரி இருவரும் படத்தில் காதலர்களாக நடித்தனர். இறுதியில், நிஜ காதலர்களாகி விட்டனர்.

கிளைமாக்சில் வரும் பிரிவின் வலியைச் சொல்லும் 'பால்வாசம்' என்ற பாடல், கல்மனதையும் கரைய வைக்கும். நேரடி இசைக்கருவிகளை வைத்து இசையமைத்த எல்.வி.கணேசன், ஒரு பாடலுக்கு 80 வயலின்களைப் பயன்படுத்தி இருக்கிறார். காதல் பாடலைப் படமாக்க, மகாராஷ்டிராவில் உள்ள ஒரு தீவில், 4 மணி நேரம் தண்ணீரில் நடந்து சென்று வந்தது மறக்க முடியாத அனுபவம். படம் முடிந்துவிட்டது. ஜூலையில் ரிலீஸ் ஆகிறது.


 

Post a Comment