வில்லியாக நடிக்க ரொம்ப பிடிச்சிருக்கு: மகாலட்சுமி

|

Love Act Negative Roles Serial Actor Mahalakshmi
சன்.டி.வியில் செல்லமே, இளவரசி, முந்தானை முடிச்சு, விஜய் டிவியில் அவள், ஜெயா.டி.வியில் இருமலர்கள், என்று சீரியல் ராணியாக வலம் வரும் மகாலட்சுமி ஒவ்வொரு சீரியலிலும் ஒவ்வொரு கெட்டப்பில் அசத்தி வருகிறார். ஒரு சீரியலில் புடவை கட்டி நிஜ மகாலட்சுமியாகவே காட்சி அளிக்கும் அவர் மற்றொன்றில் மாடர்ன் ட்ரஸ் மங்காத்தாவாக மாறிவிடுகிறார். வில்லி கெட்டப்பிலும் பின்னி எடுக்கிறார். இதைத் தவிர ஏசியா நெட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹரிச்சந்தனா சீரியலில் பணக்கார வில்லியாக களம் இறங்கியுள்ளார். ஒரே நாளில் இப்படி விதம் விதமாக நடிக்க எப்படி முடிகிறது என்று அவரிடமே கேட்டோம். இதோ மகாலட்சுமி கூறுவதை நீங்களும் படியுங்களேன்.

சன் மியூசிக்கில் டிவியில் கல கலப்பாக காம்பயரிங் செய்ய ஆரம்பிச்சதுல தொடங்கிய பயணம் இப்ப சீரியல் மூலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எப்ப பார்த்தாலும் போன்ல பேசி "ஒரே மாதிரி காம்பியர் பண்றது, நடிக்குறதுன்னு அலுத்துப்போயிதான் சீரியலில் நடிக்க ஆரம்பிச்சேன்.

வில்லியாக நெகடிவ் ரோல் பண்றது ரொம்ப இன்ரஸ்டிங்கா இருக்கு. நிறைய பேரு திட்டி, சாபம் விட்டாலும் அதை என் கேரக்டருக்கான் கிரெடிட்டா எடுத்துக்குறேன். சிலர் ஓவரா கோவத்தைக் காட்டும்போது அதை மகாலட்சுமி கிட்ட காட்டாதீங்க, கேரக்டர்கிட்ட காட்டுங்கன்னு சொல்லிடுவேன்.

நான் நடிக்கும் கதாபாத்திரம் முடிந்த உடன் வீட்டைப் பற்றிய சிந்தனை வந்து விடும். அவள் சீரியலில் நான் சஞ்சீவ் ஜோடியா நடிக்குறேன். சஞ்சீவை ஷூட்டிங்லதான் நேர்ல பார்த்தேன். ரொம்ப ஃபிரண்ட்லி.. ஒரு நிமிஷம் கூட சும்மா இல்லாம கலாய்ப்பாரு. செட்டே கலகலன்னு இருக்கும்.

கணவர் அனில்குமார் எப்போ பார்த்தாலும் கிரிக்கெட்டே கதின்னு கிடப்பாரு. சீரியல்,படம் பார்க்கவே முடியலன்னு 52 இன்ச் எல்.சி.டி டி.வி வாங்கிட்டேன். இனிமே நான் நடிச்ச அத்தனை சீரியல்களையும் ஒரு எபிசோடு கூட விடாம பார்த்துடுவேன் என்கிறார் இந்த வில்லாதி வில்லி.
 

Post a Comment