'பசங்க', 'வம்சம்', 'மெரினா' ஆகிய படங்களை இயக்கிய பாண்டிராஜ் தனது அடுத்த படத்துக்கு கேடி பில்லா கில்லாடி ரங்கா என தலைப்பிட்டுள்ளார்.
இது முழுக்க முழுக்க காமெடிப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் நாயகர்களாக விமலும் சிவகார்த்திகேயனும் நடிக்கிறார்கள். இந்த இருவரையும் ஹீரோக்களாக அறிமுகப்படுத்தியவர் பாண்டிராஜ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தில் இரண்டு ஹீரோக்கள் இருப்பது போலவே, இரண்டு வில்லன்கள் உண்டு.
முழுக்க சிரிப்புப் படம்தான் என்றாலும், அதிலும் ஒரு சமூக சிந்தனையை வைத்திருக்கிறாராம் பாண்டி.
இந்தப் படத்தில் அவருடன் முதல் முறையாக கைகோர்க்கிறார் யுவன் சங்கர் ராஜா. அதுவும் முழுக்க முழுக்க கிராமியப் பாடல்களாகத் தரப் போகிறார்களாம். பண்ணைப்புரத்து ராசாவுக்கு கிராமத்துப் பாடலை சொல்லியா தரவேண்டும்.
ஜூலை மாதத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது!
Post a Comment