முதலில் அஞ்சலி-ஓவியா, இப்போ த்ரிஷா-சுனைனா

|

Trisha Sunaina Stun Samar Team
சமர் படப்பிடிப்பில் நடிகைகள் த்ரிஷாவும், சுனைனாவும் பொழியும் பாச மழையைப் பார்த்து படக்குழுவினர் அதிசயப்படுகிறார்களாம்.

சமர் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக த்ரிஷா, சுனைனா ஆகியோர் நடித்து வருகிறார்கள். த்ரிஷா தான் நடிக்கும் படங்களில் தனக்கே அதிக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் இருக்க வேண்டும் என்பதில் குறியாக இருப்பவர்.

என்றென்றும் புன்னகை படத்தில் இயக்குனர் அகமது தமன்னாவையும் போடலாம் என்று நினைக்க அதற்கு த்ரிஷா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். என் படத்தில் இன்னொரு நாயகியா என்று கொதித்துவிட்டார். அதன் பிறகு ஒரு வழியாக சமாதானம் ஆனார். ஆனால் அந்த படத்தில் த்ரிஷாவுடன் தமன்னா நடிக்கவில்லை, இந்தி நடிகை லிசா ஹேடன் நடிக்கிறார்.

இந்நிலையில் சமர் படப்பிடிப்பில் த்ரிஷாவும், இன்னொரு நாயகியான சுனைனாவும் அக்கா, தங்கச்சி ரேஞ்சுக்கு பழகுகிறார்களாம். அவர்கள் பொழியும் பாச மழையைப் பார்த்து படக்குழுவினரே ஆச்சரியப்படுகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அதற்கும் காரணம் இருக்கிறது. படத்தில் த்ரிஷாவுக்குத் தான் வெயிட்டான கேரக்டர். சுனைனாவின் கேரக்டர் பற்றி நீங்களே புரிந்துகொள்ளுங்களேன்.
 

Post a Comment