கன்னடத்திற்குப் போகிறார் ரம்யா நம்பீசன்!

|

Ramya Nambeesan Debut Kannada With Ajay Next Aid0091  
மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்து அங்கு பெரிய அளவில் பிரேக் கிடைக்காமல் திண்டாடி வரும் ரம்யா நம்பீசன் தற்போது கன்னடத்தில் தலை காட்டவுள்ளார்.

மலையாள நடிகைகள் பலரும் மலையாளத்தை விட பிற மொழிகளில் குறிப்பாக தமிழில் நடிக்கத்தான் ஆர்வம் காட்டுகிறார்கள். டப்பு ஜாஸ்தி என்பதுதான் இதற்கு ஒரே காரணம்.

தமிழைப் போலவே அவர்கள் ஆர்வம் காட்டும் இன்னொரு மொழி தெலுங்கு. சிலர் கன்னடத்திற்கும் போவதுண்டு.

அந்த வகையில், பாவனா, பிரியாமணி, மம்தா மோகன்தாஸ், நவ்யா நாயர், பார்வதி மேனன் என பலரும் மலையாளத்திலிருந்து தமிழ் வழியாக கன்னடத்திற்குப் போயுள்ளனர். அந்த வரிசையில் தற்போது இணைகிறார் ரம்யா நம்பீசன்.

தமிழில் ராமன் தேடிய சீதை மூலம் அறிமுகமானவர் ரம்யா. ஆனால் அவருக்கு இதுவரை தமிழில் பிரேக் ஏதும் கிடைக்கவில்லை. இதனால் வேறு வாய்ப்புகளைத் தேடிய அவருக்கு கன்னட வாய்ப்பு வந்துள்ளது.

அஜய் ராவ் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடி போடப் போகிறாராம் ரம்யா. இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லையாம்.

கன்னடத்தில் நடித்தாலும் கூட தமிழிலும், தெலுங்கிலும் நல்ல வாய்ப்புகள் வரும்போது நிச்சயம் அவற்றையும் பிடித்துக் கொண்டு நடிப்பாராம் ரம்யா.

'கலைச்சேவை'தானே, எங்கிருந்து செய்தால் என்ன...!
 

Post a Comment