அதிக சம்பளம் கேட்டதால் மோகன்லால் படத்திலிருந்து த்ரிஷா நீக்கம்!!

|

Trisha Drops From Mohan Lal Movie   

அதிக சம்பளம் கேட்டதால் மோகன்லாலின் மலையாளப் படத்திலிருந்து நடிகை த்ரிஷா நீக்கப்பட்டுள்ளார்.

சமர் படத்தில் விஷால் ஜோடியாக நடிக்கிறார் திரிஷா. பூலோகம், என்றென்றும் புன்னகை என மேலும இரு படங்கள் அவர் கைவசம் உள்ளன.

இந்நிலையில் மோகன்லால் ஜோடியாக மலையாள படமொன்றில் நடிக்க திரிஷாவுக்கு வாய்ப்பு வந்தது. அவர் இதுவரை மலையாளப் படத்தில் நடிக்கவில்லை. முன்பு அப்படி வந்த பல வாய்ப்புகளை த்ரிஷா கண்டுகொள்ளவே இல்லை.

இந்த நிலையில் மோகன்லால் படத்துக்கு திரிஷா பொருத்தமாக இருப்பார் என இயக்குநர் ஜோஷி கருதியதால் அவரை ஒப்பந்தம் செய்ய பேசியுள்ளனர்.

திரிஷாவும் நடிக்க ஒப்புக்கொண்டாராம். சம்பளம் பற்றி பேசியபோது திரிஷா ரூ. 40 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது. மலையாள திரையுலகின் மார்க்கெட் சிறியது. 40 லட்சம் சம்பளம் கொடுத்தால் கட்டுப்படியாகாது என தயாரிப்பாளர் கருதினார். மம்முட்டி, மோகன்லாலுக்கே அதிகபட்சம் ரூ 1 கோடி வரைதான் சம்பளம் தரப்படுகிறது.

இதையடுத்து படத்தில் இருந்து திரிஷா நீக்கப்பட்டதாக மலையாள பட உலகில் செய்தி பரவியுள்ளது. ஆனால் திரிஷாவின் தாய் உமாவிடம் இதுகுறித்து கேட்டபோது, "திரிஷாவுக்கு மலையாளத்தில் இருந்து நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் அவரிடம் கால்ஷீட் இல்லை. அவர் மலையாளப் படம் எதிலும் நடிக்கவே இல்லையே," என்று ஒரே போடாகப் போட்டார்!!

 

Post a Comment