அஜீத் பல படங்களை நடிக்க மறுப்பு தெரிவிக்க, அந்த படங்கள் அனைத்தும் சூர்யாவிடம் கைமாறியது. மேலும் அந்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. சூர்யாவின் காக்க.. காக்க, கஜினி, மற்றும் ஆர்யாவின் நான் கடவுள் என பல படங்கள் அஜீத்திற்காக எழுதப்பட்ட கதைகள். இப்போது அந்த வரிசையில் அஜீத் கைட்ட படமான 'துப்பறியும் ஆனந்த்' படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்கிறார். இதுபற்றி கௌதம் மேனன் கூறுகையில் "துப்பறியும் ஆனந்தன் படத்தில் சூர்யா என்னுடன் இணைவதில் பெரிய மகிழ்ச்சி. ரொம்ப ஸ்டைலான ஆக்ஷன் படம் இது. 2013-ல் தொடங்குகிறது," என்றார்.
Post a Comment