நல்ல அழகு. அதைவிட அழகான நடிப்பு எனப் பெயர்பெற்ற நடிகை ராதிகா ஆப்தேவுக்கு.... விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது.
லண்டனைச் சேர்ந்த பெனடிக்ட் டெய்லர் என்ற இசைக் கலைஞருடன் அவருக்கு சமீபத்தில்தான் நிச்சயதார்த்தம் நடந்தது.
பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் வெளியான தோனி படத்தில் நாயகியாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் ராதிகா.
திரைப்படங்களில் பிஸியாக இருந்தாலும், இசை நடனம், நாடகங்கள் என வித்தியாசமான நடிகையாகத் திகழ்பவர்.
இப்போது அஜ்மல் ஜோடியாக வெற்றிச் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.
நிறைய படங்கள் நடிக்க வேண்டும், நம்பர் ஒன் நாயகியாக வேண்டும் என்றெல்லாம் தனக்கு லட்சியமில்லை என்றும், மனசுக்குப் பிடித்த மாதிரி நடிக்கணும் என்றும் கூறுகிறார் ராதிகா.
"குடும்பம் - தொழில் இரண்டுமே முக்கியம் எனக்கு. இரண்டையும் பேலன்ஸ் பண்ணி வருகிறேன். பெனடிக்ட்டும் நானும் நண்பர்களாக பழக ஆரம்பித்து காதலர்களானோம். பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்யவிருக்கிறோம். சமீபத்தில்தான் எங்கள் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமண அறிவிப்பு விரைவில்," என்றார்.
Post a Comment