வானத்தில் உள்ள நட்சத்திரத்துக்கு நடிகை மாதுரி தீட்சித் பெயர்!

|

Star Named After Madhuri Dixit   

விண்மீன் கூட்டத்தில் உள்ள ஒரு நட்சத்திரத்துக்கு நடிகை மாதிரி தீட்சித்தின் பெயரைச் சூட்டியுள்ளனர்.

இந்தி திரைப்பட உலகில் 20 ஆண்டுளுக்கும் மேல் கொடி கட்டிப் பறந்தவர் நடிகை மாதுரி தீட்சித். தற்போது 45 வயதானாலும், இன்னும் பல லட்சம் ரசிகர்கள் அவருக்கு உள்ளனர்.

இந்த நிலையில் திரையுலக நட்சத்திரமான மாதுரி தீட்சித் விண்ணிலும் நட்சத்திரமாக மின்னத் தொடங்கியுள்ளார். அதாவது விண்மீன் கூட்டத்தில் உள்ள ஒரு நட்சத்திரத்துக்கு அவருடைய பெயரைச் சூட்டியிருக்கிறார்கள். இந்த தகவலை சமூக வலைதளத்தில் அவரே வெளியிட்டு உள்ளார்.

"ஓரியான் என்ற விண்மீன் கூட்டத்தில் உள்ள ஒரு நட்சத்திரத்துக்கு என்னுடைய பெயரை வைத்துள்ளனர். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மிகப்பெரிய கவுரவம் வழங்கப்பட்டதற்காக எனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

நட்சத்திரத்துக்கு மாதுரி தீட்சித் பெயர் வைத்ததற்கான சான்றிதழை ஸ்டார் பவுண்டேசன் என்ற அமைப்பு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வழங்கியது.

அந்த சான்றிதழையும் சமூக வலைத்தளத்தில் நடிகை மாதுரி தீட்சித் வெளியிட்டுள்ளார்.

 

Post a Comment