விமர்சிப்பவர்களை பற்றி கவலையில்லை

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
என் படத்தை விமர்சிப்பவர்களைப் பற்றி கவலை இல்லை என்றார் பிரபு தேவா. இதுபற்றி பிரபு தேவா கூறியதாவது: இந்தியில் இயக்கிய 'ரவுடி ரத்தோர்' படம் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி. கடந்த கால படங்களின் வசூலை இப்படம் முறியடித்துள்ளது. முதல்வார தொடக்கத்திலேயே ரூ.48.3 கோடி வசூலித்துள்ளது. தெலுங்கு படத்தின் ரீமேக்தான் இப்படம். பொருத்தமான பொழுதுபோக்கு படமாக அமைந்திருந்தது. ஆனால் இந்த வெற்றி பற்றி பாராட்டாமல் சிலர் படத்தை விமர்சிக்கிறார்கள். எந்த சீனுக்கும் காரணம் இல்லை, லாஜிக் இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அவர்களின் விமர்சனத்தை மதிக்கிறேன். ஆனால் விமர்சகர்களுக்காக நான் படம் இயக்கவில்லை. எல்லா படங்களும் ரசிகர்களை கவரும் எண்ணத்துடனே உருவாக்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு கமர்ஷியல் படங்களுக்கு தலைவணங்குகிறேன். அப்படங்கள் அதிகபட்ச பொழுதுபோக்கு படங்களாக அமைந்துள்ளது. இந்த இருமொழி படங்களின் பார்முலாதான் இந்திய சினிமாவின் கமர்ஷியல் படங்களுக்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது. மற்ற எந்த பாணியிலான படங்களை இயக்குவதைவிடவும் மாஸ் படங்களை இயக்குவது கடினம். தென்னிந்திய மொழிப் படங்களை ரீமேக் செய்வதில் பெருமை. அந்த வரிசையில் 'வான்டட்', 'ரவுடி ரத்தோர்' படங்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இவ்வாறு பிரபுதேவா கூறினார்.


 

Post a Comment