நோயாளிகளை ஏமாற்றி காசு பறிக்கும் டாக்டர்களிடம் மன்னிப்பு கேட்பதா?

|

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
நோயாளிகளை ஏமாற்றி காசு பறிக்கும் டாக்டர்களிடம் மன்னிப்பு கேட்க முடியாது என்று ஆமிர்கான் கூறினார். இந்தி டிவி சேனல் ஒன்றில் பாலிவுட் நடிகர் ஆமிர்கான் 'ரியாலிட்டி ஷோ' நடத்துகிறார். அதில், 'சாதாரண நோய்க்காக சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் சில டாக்டர்கள் பயமுறுத்தி அறுவை சிகிச்சை வரை இழுத்து சென்று விடுகின்றனர். அவர்களிடமிருந்து பணம் பறிப்பதற்காகவே இந்த முறைகேட்டில் ஈடுபடுகின்றனர்' என்று கருத்து தெரிவித்தார். இதற்கு இந்திய மருத்துவ சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்காவிட்டால் ஆமிர்கானை எதிர்த்து நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனர்.

இதற்கு பதில் அளித்துள்ள ஆமிர்கான், ''நான் மருத்துவ துறையை இழிவுபடுத்தும் நோக்கில் கருத்து தெரிவிக்கவில்லை. மருத்துவ துறையை பெரிதும் மதிக்கிறேன். டாக்டர் தேவி ஷெட்டி, டாக்டர் ஷமித் ஷர்மா உள்ளிட்ட பல டாக்டர்கள் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றுகிறார்கள். அவர்களை பாராட்டுகிறேன். சிறிய அளவிலான சில டாக்டர்கள் நியாய தர்மங்களுக்கு எதிராக செயல்படுகின்றனர். எனது கருத்தை மருத்துவ துறையை சேர்ந்த பிரபல டாக்டர்களும் மருத்துவ கல்லூரி மாணவர்களும் பாராட்டி இருக்கிறார்கள். முறைகேடாக நடக்கும் டாக்டர்களிடம் மன்னிப்பு கேட்க முடியாது'' என்றார்.


 

Post a Comment