வேணாம் வேணாம்... நடிகர்களுக்கு அரசியல் ஆசையை ஏற்படுத்த வேண்டாம்! - நாசர்

|

Don T Drag Actors Into Politics

நடிகர்களுக்கு அரசியல் ஆசையை ஏற்படுத்த வேண்டாம் என நடிகர் நாசர் கேட்டுக் கொண்டார்.

சகுனி படத்தின் வெற்றி அறிவிப்பு பிரஸ்மீட்டில் பங்கேற்ற போது, நடிகரும் இயக்குநருமான மனோபாலா, “கார்த்தி அரசியலுக்கு வரவேண்டும். சிவகுமார் ஒரு மகனை நாட்டுக்கும் இன்னொரு மகனை வீட்டுக்கும் கொடுத்திருக்கிறார் என்றார்.

கமலா தியேட்டர் உரிமையாளர் வள்ளியப்பன், சகுனி அரசியல் படம். அரசியல் மீது ஆர்வம் இருப்பதால்தான் கார்த்தி அரசியல் படத்தில் நடித்திருக்கிறார் என்றார்.

உடனே கார்த்தி குறுக்கிட்டு, ஏங்க…நல்லாத்தானே போயிட்டிருக்கு. ஏன் இப்படி? என்றார்.

அடுத்து வந்த நாசர், அனைவரது கருத்துக்கும் முற்றுப்புள்ளி வைப்பது போல இப்படிச் சொன்னார்:

“சில நடிகர்களுக்கு தொடர்ந்து நான்கு படங்கள் வெற்றி பெற்றால், உடனே முதலமைச்சர் கனவு வந்து விடுகிறது. கார்த்தி அப்படிப்பட்டவர் அல்ல. அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று தூபம் போடாதீர்கள்… நடிகர்களுக்கு அரசியல் வேண்டாம். அவரவர் வேலையைச் சரியாக செய்தால் போதும்,” என்று கேட்டுக்கொண்டார்.

 

Post a Comment