சினிமாவுக்கே லாயக்கில்லாதவர் பிராச்சி தேசாய் - மகிழ்திருமேனி தாக்கு

|

Magizh Thirumeni Blasted Prachi

நடிகை பிராச்சி தேசாய் விவகாரம் மீண்டும் பெரிதாகிறது. தடையறத் தாக்க படத்தில் முதலில் ஒப்பந்தமாகி, பின், அட்வான்ஸைக் கூட திருப்பித் தராமல் ஓடிப்போன பிராச்சி, சினிமாவுக்கே லாயக்கில்லை என்று படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி கூறியுள்ளார்.

அருண்விஜய் நடித்த 'தடையற தாக்க' படத்தை இயக்கியவர் மகிழ்திருமேனி. இப்படம் தற்போது ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக இந்தி நடிகை பிராச்சி தேசாயை ஒப்பந்தம் செய்தனர். அவர் திடீரென நடிக்க மறுத்து படப்பிடிப்பில் இருந்து ஓடியதால் மம்தா மோகன்தாஸ் நாயகியானார்.

பிராச்சி தேசாய் ஓடியதால் மன உளைச்சலுக்கு ஆளானதாக இயக்குனர் மகிழ்திருமேனி கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில், "தடையற தாக்க படத்தில் கதாநாயகியாக நடிக்க பிராச்சி தேசாயை தேர்வு செய்ததும் அவர் வீட்டுக்கு போய் முழு கதையையும் சொன்னேன். அவருக்கு பிடித்தது.

'முந்தைய படங்கள் வயதுக்கு மீறிய கதைகளாக இருந்தன. இந்த படம் என் வயதுக்கு ஏற்ற கதை. நிச்சயம் நடிப்பேன்' என்றார். அட்வான்சும் வாங்கினார்.

சென்னையில் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் நடந்தன. பிராச்சி தேசாயும் அதில் நடிக்க மும்பையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு வந்தார். இங்குள்ள ஓட்டல் ஒன்றில் தங்க வைத்தோம். மறுநாள் காலை படப்பிடிப்பை திடீரென ரத்து செய்து விட்டு மும்பை போய்விட்டார். இதனால் அவரது காட்சிகளை படமாக்க முடியவில்லை.

அதன்பிறகு பலமுறை தொடர்பு கொண்டும் நடிக்க வரவில்லை. ஏதேதோ காரணங்கள் சொல்லி தட்டிக் கழித்தார். பிராச்சி தேசாய் சினிமாவுக்கு லாயக்கு இல்லாத நடிகை.

அவர் நடிக்காவிட்டால் என்ன... 'தடையற தாக்க' படம் நன்றாக ஓடுகிறது," என்றார்.

 

Post a Comment