நடிகை சங்கீதா கர்ப்பமாக உள்ளாராம்!

|

Sangeetha Become Mom Soon
நடிகை சங்கீதா எத்தனையோ தமிழ் படங்களில் நடித்தும் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது பிதாமகன் படம் தான். அந்த படத்துக்காக அவருக்கு பிலிம்பேர் விருதும், சிறந்த துணை நடிகைக்கான தமிழக அரசின் விருதும் கிடைத்தது. அதையடுத்து அவர் நடித்த உயிர் படத்தில் அவரது நடிப்பு பேசப்பட்டது. அதன் பிறகு கமல் ஹாசனின் மன்மதன் அம்பு படத்தில் அவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

சங்கீதா பாடகர் கிருஷ்-ஐ கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1ம் தேதி திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வைத்து மணந்தார். திருமணமாகி மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அவர் கர்ப்பமாக இருக்கிறார். இன்னும் ஒரு சில மாதங்களில் தாயாகிவிடுவார் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, நடிகர் சத்யராஜ் தாத்தாவாகப் போகிறார். அதாவது அவரது மகன் சிபிராஜ் தந்தையாகப் போகிறார். மேலும் இயக்குனர் வெங்கட் பிரபு மீண்டும் அப்பாவாகிறார். அவருக்கு ஏற்கனவே ஷிவாணி என்ற மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Post a Comment