சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கவிருக்கும் மதகஜராஜாவில் அவருக்கு ஜோடியாக நடிகைகள் டாப்ஸி, வரலக்ஷ்மி ஆகியோர் நடிக்கவிருக்கிறார்கள்.
இயக்குனர் சுந்தர் சி. விஷாலை வைத்து மதகஜராஜா சுருக்கமாகச் சொன்னால் எம்.ஜி.ஆர். என்னும் படத்தை எடுக்கவிருக்கிறார். இதில் விஷால் 3 கதாபாத்திரங்களில் நடிக்கிறார். இந்த படத்தில் கார்த்திகா தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் சுந்தர் சி. திடீர் என்று கதையை இரண்டு நாயகிகள் வருமாறு மாற்றியமைத்ததால் அவர் படத்தை விட்டு வெளியேறினார்.
தன்னிடம் கூறிய கதை வேறு, தற்போது எடுக்கவிருக்கும் கதை வேறு அதனால் தான் படத்தில் இருந்து விலகுகிறேன் என்று கார்த்திகா தெரிவி்த்தார். இந்நிலையில் அந்த 2 கதாநாயகிகள் கதாபாத்திரத்திற்கும் ஆளைப் பிடித்துவிட்டார் சுந்தர் சி. இரண்டு விஷாலுக்கு ஜோடியாக டாப்ஸி மற்றும் வரலக்ஷ்மி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரு விஷால் கெட்டவனாக வருகிறாராம். அவருககு மட்டும் ஜோடி இல்லை.
விஷால் தற்போது திரு இயக்கத்தில் த்ரிஷா, சுனைனாவுடன் சமர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படம் முடிந்தவுடன் எம்.ஜி.ஆர். படப்பிடிப்பு துவங்கும்.
விஷால் மச்சக்காரன் தான். சமர் படத்திலும் சரி, எம்.ஜி.ஆரிலும் சரி இரண்டு நாயகிகள்.
Post a Comment