சன் நியூஸ் தொலைக்காட்சியில் சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் டாக்டர் எக்ஸ் நிகழ்ச்சி தொலைபேசி வாயிலாக நேயர்களின் பாலியல் கேள்விகளுக்கு பதிலளிக்கின்றனர். பிரபலமான செக்ஸாலிஸ்ட்டுகள், மனநல மருத்துவர்களுடன் நேயர்கள் தொலைபேசி வாயிலாக தங்களில் பாலியல் குறித்த சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்கின்றனர்.
கடந்த சனிக்கிழமை மனநல மருத்துவர் டாக்டர் அசோகன் பாலியல் மற்றம் மனநலம் தொடர்பான நேயர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். பாலுணர்வு என்பது முதலில் மனதோடு தொடர்புடையது. நமக்கு இது பிடித்திருக்கிறது என்று மனம் (மூளை ) உணர்ந்து அதன் பின்தான் அவை ஹார்மோன்களை தூண்டுகின்றன. பின்னர் பாலுறுப்புகளுக்கு உணர்வுகளை தருகிறது என்றார்.
அதேபோல் எத்தனை வயது வரை செக்ஸ் வைத்துக்கொள்ளலாம் என்ற நேயர்களின் கேள்விக்கு பதிலளித்த மருத்துவர், உறவு கொள்வதற்கு வயது ஒரு தடையில்லை என்றார். ஆரோக்கியமான உடல்நிலையும், மனதும் இருந்தால் அறுபது வயதிலும் கூட தாம்பத்ய உறவு கொள்ளலாம் என்று நேயர்களுக்கு அவர் பதிலளித்தார்.
பாலியல் தொடர்பான கேள்விகளை கேட்பவர்களுக்கு மட்டுமல்லாது நிகழ்ச்சியைப் பார்க்கும் நேயர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கிறது என்பதால் இதற்கு வரவேற்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
Post a Comment