குஷ்பு மணிக்கட்டில் மகள்கள், முதுகில் மயில் டாட்டூ

|

Kushboo Tattooes National Animal On Her Back
நடிகை குஷ்பு தனது நாட்டுப்பற்றை வெளிப்படுத்த நமது தேசிய பறவையான மயிலை தனது முதுகில் பச்சை குத்தியுள்ளார்.

திரை நட்சத்திரங்கள் தற்போது அதிக அளவில் பச்சைக் குத்தி வருகிறார்கள். நடிகர் அர்ஜூன் தனது நாட்டுப்பற்றை வெளிப்படுத்த தனது கையில் தேசியக் கொடியை பச்சைக் குத்தியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் தனது முதல் படமான ஓ.கே.ஓ.கே.வை பச்சைக்குத்தியுள்ளார். முன்னதாக அவர் தனது மகன் மற்றும் மகளின் பெயர்களை பச்சைக் குத்தியுள்ளார். சினிமாவில் சான்ஸ் கிடைப்பதற்காக ஜோதிடர் ஒருவரின் ஆலோசனைப்படி நமீதா தனது முதுகில் 27 நட்சத்திரங்களை பச்சைக்குத்தியுள்ளார்.

தற்போது குஷ்புவும் அந்த பட்டியலில் சேர்ந்துள்ளார். குஷ்பு தனது நாட்டுப்பற்றை காட்ட நம் தேசிய பறவையான மயிலை தனது முதுகில் பச்சை குத்தியுள்ளார். மேலும் அவர் தனது மணிக்கட்டில் தனது மகள்கள் அவந்திகா, அனந்திதா ஆகியோரின் பெயர்களை பச்சைக்குத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் மும்பைக்கு சென்ற குஷ்பு பிரபுதேவாவின் ரவுடி ரத்தோர் படக்குழுவை தனது மகள்களுடன் சென்று சந்தித்துள்ளார். குஷ்புவின் இளைய மகள் அனந்திதா அக்ஷ்ய குமாரின் தீவிர ரசிகை. தனது ஹீரோவைப் பார்த்த அனந்திதாவுக்கு ஒரே குஷி. அதிலும் அக்ஷய் தனது குட்டி ரசிகையை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தில் அனந்திதாவுக்கு ஒரே கொண்டாட்டம் தான். அக்ஷய் சிறிதும் பந்தா இல்லாதவர், எளிமையானவர் என்று குஷ்பு அவர் புகழ் பாட ஆரம்பி்த்துவி்ட்டார்.
 

Post a Comment